இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.84,000- மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் மற்றும் மதன் ஆகியோரின் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.30,000-மும், விருதுநகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மலைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் செல்வன் ஆகியோரின் குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.20,000-மும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவராம் குமார் மற்றும் கணக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த மணி சேகர் ஆகியோரின் குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.10,000- மும்,கரூரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் திருச்சியை சேர்ந்த கோகுல் பிரசாத் ஆகியோரின் குழுவிற்கு நான்காம் பரிசாக ரூ.7000- மும், திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கபிலன் ஆகியோரின் குழுவிற்கு ஐந்தாம் பரிசாக ரூ.5000- மும்,
சிவகாசியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் குழுவிற்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப தாஸ் மற்றும் பந்தன்திட்டாவை சேர்ந்த டென்சின் சைமன் ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த பாலாஜி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மைதிலி ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் குழுவிற்கும், திருச்சியைச் சேர்ந்த மணிவேல் மற்றும் சேலத்தைச் சேர்ந்த நவீன் குமார் ஆகியோரின் குழுவிற்கும், பல்லடத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஆகியோரின் குழுவிற்கும் என 6 குழுவிற்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000- மும் என மொத்தம் 11 குழுக்களுக்கு ரூ.84,000- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply